உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டில்லி நீதிமன்றத்தில வழக்கு தொடர்ந்த நாக சைதன்யா

டில்லி நீதிமன்றத்தில வழக்கு தொடர்ந்த நாக சைதன்யா

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, டில்லி உயர்நீதிமன்றத்தில் அவருடைய ஆளுமை உரிமையைப் பாதுகாக்கும் விதத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

நாக சைதன்யாவின் நற்பெயரைக் கெடுக்கும் விதத்தில், சில செய்திகள், வீடியோக்கள் தவறான, அவதூறான செய்திகளை வெளியிடுவதாக வழக்கில் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாகசைதன்யா அவருடைய முன்னாள் மனைவி நடிகை சமந்தாவைத் திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும், அவருடைய திரையுலக வாழ்க்கையை நாசம் செய்துள்ளதாகவும் அந்த வீடியோக்களில் இடம் பெற்றுள்ளது என்றும், ஏஐ மூலம் ஆபாச வீடியோக்களையும் பதிவேற்றி நாக சைதன்யாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். வழக்கு செப்டம்பர் 30ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !