தமிழ் சினிமாவின் 11வது 300 கோடி படமாக 'கருப்பு' : மற்ற படங்களின் லிஸ்ட் இதோ...
சூர்யா நடித்து வெளிவந்த 'கருப்பு' திரைப்படம் தமிழ் சினிமாவின் 11வது 300 கோடி படமாக அமைந்துள்ளது. இந்தப் படம் சுமார் 100 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் என்கிறார்கள். அதில் பாதிக்கும் மேலான தொகையை ஓடிடி, சாட்டிலைட் டிவி உரிமை மூலமே பெற்றிருப்பார்கள். எஞ்சியுள்ள பாதித் தொகையைப் பெறுவதற்குத்தான் தியேட்டர் வியாபாரம் நடந்திருக்கும்.
உலக அளவில் மொத்தமாக 70 கோடிக்குத் தியேட்டர் வியாபாரம் நடந்ததாகத் தகவல். 300 கோடி வசூலில் பங்குத் தொகையாக சுமார் 150 கோடி வந்திருக்கலாம். அதனால், தற்போது வரையில் இந்தப் படம் 80 கோடி வரையில் லாபத்தைக் கொடுத்துள்ளது.
சில படங்கள் 300 கோடி வசூலைக் கடந்தாலும் லாபத்தைத் தந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அதை விடவும் அந்தப் படங்களுக்கான பட்ஜெட் அதிகமாக இருந்திருக்கம். தமிழ் சினிமாவில் 300 கோடி வசூலைக் கடந்த 11வது படமாக 'கருப்பு' படம் இருக்கிறது. இதற்கு முன்பு 300 கோடி வசூலைக் கடந்த படங்களின் பட்டியல் கீழே…
1. 2.0 - 800 கோடி
2. ஜெயிலர் - 600 கோடி
3. லியோ - 600 கோடி
4. கூலி - 500 கோடி
5. பொன்னியின் செல்வன் 1 - 500 கோடி
6. தி கோட் - 450 கோடி
7. விக்ரம் - 450 கோடி
8. பொன்னியின் செல்வன் 2 - 350 கோடி
9. கபாலி - 300 கோடி
10. அமரன் - 300 கோடி