உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 'ஜனநாயகன்' ரிலீஸ் ?

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 'ஜனநாயகன்' ரிலீஸ் ?


தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய் நடித்த கடைசி படம் 'ஜனநாயகன்'. ஜனவரி 9ம் தேதி அறிவிக்கப்பட்ட படம் சென்சார் சான்றிதழ் காரணமாக இதுவரையில் மறு வெளியீட்டுத் தேதி அறிவிப்பு வெளியிடப்படவில்லை. விஜய் முதல்வரான பின் அடுத்த சில நாட்களில் இப்படத்தின் தணிக்கை சான்றிதழ் வந்துவிடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், இதுவரையில் வரவில்லை என்றுதான் சொல்கிறார்கள்.

இதனிடையே, உடனடியாக படத்தை வெளியிட வேண்டாம் சரியான ஒரு வாரத்தில் படத்தை வெளியிடுவோம் என யோசித்து வருகிறார்கள். அந்த விதத்தில் விஜய்யின் பிறந்தநாள் ஜுன் 22ம் தேதி வருகிறது. எனவே ஜுன் 19ம் தேதியன்று படத்தை வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்றும் நினைக்கிறார்களாம்.

விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம், விஜய்யின் கடைசி பட கொண்டாட்டம் என இரண்டையும் சேர்த்து ரசிகர்கள் கொண்டாடவும் வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !