உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 100 கோடியைக் கடந்த 'கருப்பு'

100 கோடியைக் கடந்த 'கருப்பு'


சூர்யா, த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடிப்பில் மே 15ம் தேதி வெளியான படம் 'கருப்பு'. இப்படம் மூன்றே நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் இரண்டு நாட்களில் சுமார் 45 கோடி வசூலைக் கடந்திருந்த இப்படம், நேற்று ஒரே நாளில் 55 கோடி வசூலைப் பெற்றிருக்கலாம் என்கிறார்கள். நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் அதிகபட்சமான டிக்கெட்டுகள் விற்றிருக்கிறதாம். சுமார் 5 லட்சம் டிக்கெட்டுகள் நேற்று மட்டும் விற்கப்பட்டுள்ளதாகத் தகவல். அதுதான் இந்த வசூல் உயர்வுக்குக் காரணம்.

கடந்த 13 வருடங்களுக்கும் மேலாக பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெறாமல் தவித்துவந்த சூர்யாவுக்கு இந்த 'கருப்பு' நிறைய கை கொடுத்திருக்கிறது. மேலும், கடந்த நான்கு மாதங்களாக தடுமாறி வந்த தமிழ் சினிமாவையும் காப்பாற்றியிருக்கிறது என தியேட்டர் வட்டாரங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிடும் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

ram, mayiladuthurai
2026-05-18 12:23:57

அதில் என்ன கஞ்சத்தனம் ஒரு ஆயிரம் கோடி வசூல் என்று போடலாமே