உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாடகர் வேடனின் செயினில் இருப்பது புலிப்பல் தான் ; ஆய்வறிக்கை வெளியானதால் சிக்கல்

பாடகர் வேடனின் செயினில் இருப்பது புலிப்பல் தான் ; ஆய்வறிக்கை வெளியானதால் சிக்கல்


சமீப வருடங்களாக மலையாளத்தில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகி வருபவர் ராப் பாடகர் வேடன். கடந்த வருடம் கொச்சியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவர் அணிந்திருந்த செயினின் டாலரில் ஒரு விலங்கின் பல் இருந்தது கண்டறியப்பட்டு, அது வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை கொல்கட்டாவில் உள்ள புகழ்பெற்ற உயிரியல் ஆய்வு கூடத்திற்குச் சோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர். இந்த நிலையில், தற்போது அது நிஜமான ஒரு புலியின் பல் என்பது உறுதி செய்யப்பட்டு அறிக்கை வெளியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து கேரள வனத்துறை வேடனுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீவிரமாக ஆவணங்களைத் தயாரித்து வருகிறதாம். முன்னதாக வனத்துறை நடத்திய விசாரணையில், இந்த மாலையை தான் தாய்லாந்தில் வாங்கியதாகவும், அதன் பின்னர் சென்னையில் நடந்த ஒரு ராப் இசை நிகழ்ச்சியில், சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமான ரஞ்சித் கும்பிடி என்ற இலங்கை வம்சாவளி ரசிகர் தனக்கு பரிசாக வழங்கினார் என்றும் முன்னுக்குப்பின் முரணாக வேடன் வாக்குமூலம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !