உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் தெலுங்கு நடிகரை வைத்து படம் இயக்கும் லிங்குசாமி!

மீண்டும் தெலுங்கு நடிகரை வைத்து படம் இயக்கும் லிங்குசாமி!


இயக்குனர் லிங்குசாமி 'ரன், சண்டக்கோழி, பையா, அஞ்சான்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'சண்டக்கோழி 2, தி வாரியர்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

இதன் பின்னர் லிங்குசாமி, வித்யாசாகர் மகனை வைத்து இயக்குவதாக இருந்த படத்தை லிங்குசாமி தள்ளி வைத்துள்ளார். இந்த நிலையில் ராம் பொத்தினேனியை தொடர்ந்து மீண்டும் ஒரு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை வைத்து லிங்குசாமி ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இது ஒரு ஆக்சன், பேமிலி படமாக உருவாகிறது என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !