உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி

விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி

நடிகர் ரவி மோகன் அவரது காதல் மனைவி ஆர்த்தி ஆகியோர் இடையே பிரிவு ஏற்பட்டு விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி உள்ளனர். இந்த வழக்கு குடும்பநல கோர்ட்டில் நடந்து வருகிறது. இதனிடையே ரவி மோகன், பாடகி கெனிஷா பிரான்சிஸ் உடன் நெருக்கம் காட்டி வந்தார். இருவரும் பல நிகழ்வுகளுக்கு ஒன்றாக வந்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஆர்த்தி பற்றி கெனிஷா எதுவும் பேசக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதையடுத்து தான் யார், தன் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள், துயரங்கள் என்னென்ன என்பதை வீடியோ வெளியிட்டு இருந்தார் கெனிஷா.



மேலும் மற்றொரு பதிவில், ‛‛நான் அவரை(ரவி மோகன்) விட்டு பிரிந்துவிட்டேன், சென்னையை விட்டும் வெளியேறிவிட்டேன். ஆன்லைன் விமர்சனங்கள் மற்றும் சூழ்ச்சிகளால் நான் சோர்ந்துவிட்டேன். கடவுள் வெற்றி பெறும் வரை நான் இன்ஸ்டாகிராம் மற்றும் அனைத்துத் சமூக வலைதளங்களிலிருந்தும் விலகுகிறேன். பெண்ணியம் வெற்றி பெற்றது, மகிழ்ச்சிச் தோற்றுப்போனது'' என பதிவிட்டு இருந்தார்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் ரவி மோகன். அவர் கூறுகையில், ‛‛சில விஷயங்கள் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். இது பெர்சனல் இன்டர்வியூ, சினிமா தொடர்புடையது கிடையாது. சாது மிரண்டால் காடு கொள்ளாது. சாதுவாக இருந்த என்னை சிலர் சீண்ட முயற்சிக்கின்றனர். இத்தனை நாள் பேசாமல் இருந்தது தவறு, முட்டாள் தனம்.



மற்றவர்கள் போல் எனக்கு 25 பேர் கொண்ட குழு கிடையாது. 23 ஆண்டுகளாக சினிமா துறையில் பணியாற்றி வந்துள்ளேன். என் குடும்பத்தை ஏதேனும் குறை கூறினால், சும்மா இருக்க மாட்டேன். பாலியல் வன்கொடுமைக்கு எதிராக படம் எடுத்தவன் நான். பெண்கள் பற்றி எனக்கு தெரியாதா? என் அம்மா அப்படி என்னை வளர்க்கவில்லை. பெண்களுக்கு முன்னுரிமை தந்து படங்கள் எடுத்தவன் நான்

எனக்கு பாசம் இல்லையா
இவ்வளவு நாள் நான் அமைதி இருந்ததுக்கு காரணம் உண்மை ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத்தான். குழந்தைகள் மீது அன்பு இல்லை என்று என்னை பார்த்து சொல்கிறார்கள். என் பாசத்தை பற்றி யாரும் பேசாதீங்க. அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என தெரிந்து தான் ஓடி வந்தேன். 14 வருஷம் கஷ்டப்பட்டு வாழ்ந்தேன். பாதுகாவலர்களுடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். சைபர் புல்லிங்கால் கெனிஷாவை ஊரை விட்டே அனுப்பி விட்டீங்க, அவர்களை சும்மா விடமாட்டேன்.

எதுவும் இல்லாமல் வெளியேறினேன்
எதுவும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே நான் வந்தேன். அவர்கள் நன்றாக கோடி கணக்கான சொத்துகளோடு சுகமாக இருக்கிறார்கள். என்ன கிண்டல் பண்ணாலும் நான் அமைதியாகவே இருக்கணும். இனி நான் அமைதியாக இருக்க போவதில்லை. அந்த வீட்டில் என்ன நடந்தது என அந்த தெருவிற்கே தெரியும். அந்த குடும்பம் வேண்டாம் என என் பெற்றோர் கெஞ்சினார்கள். நான் தான் கேட்கவில்லை.

என் கஷ்டத்தில், என் கூட இருந்தவர் தான் கெனிஷா. என் பசங்களுக்காக மட்டும் தான் அமைதியாக இருக்கிறேன். என் வேலையே அழகான பெண்களுடன் வேலை செய்வது, அப்போது எல்லாம் பெண்களுடன் ஓடாதவன் இப்போது 45 வயதில் ஓடப்போகிறேனா. 23 வருஷம் என் மேல் ஒரு பிளாக் மார்க் கூட இல்லாமல் வாழ்ந்து வருகிறேன்.



நான் சாகணும் நினைக்கிறார்கள்
என்னை நிம்மதியாக வாழ விடாமல் செய்கின்றனர். என் பெயரில் ஒரு பேங்க் அக்கவுண்ட் கூட கிடையாது. ஒரே ஒரு அக்கவுண்ட் மட்டும் தான் இருந்தது, அது என் முன்னாள் மனைவி உடன் இருந்தது. நான் சம்பாதித்து அவர்களுக்கு கணக்கு சொல்லிகிட்டு இருந்தேன். எனக்கு சொல்ல முடியாத அளவுக்கு அநியாயம் நடந்து இருக்கு, நான் ரத்த வாந்தி எடுத்துகிட்டு இருக்கேன். எனக்கு பிளாக் மேஜிக் வைத்துள்ளனர். நான் உயிரோடு இருக்க கூடாது என நினைக்கிறார்கள். அதுவும் விரைவில் நடக்கும், அனைவரையும் முடித்துவிட்டு தான், சிரித்த முகத்தோடு செல்வேன்.

குடும்பத்தை கெடுக்கும் நடிகை
மூன்றெழுத்து இட்லி நடிகை ஒருவர் என் குடும்பத்தை கெடுக்கிறார். என்னை பற்றி பேச உனக்கு தகுதி இருக்கிறதா? ஏஐ மூலம் எடிட் செய்து எனக்கு எதிராக வன்மத்தை பரப்புகிறார்கள். சைபர் துன்புறுத்தலால் பலம் உயிரிழந்துள்ளனர். என்னை அடிமையாக வைத்திருந்தார்கள், எனக்கு நடந்தது பிளாக் மெயில் திருமணம். கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்வேன் என மிரட்டி திருமணம் செய்தனர். அவர்கள் குடும்ப தயாரிப்பு நிறுவனத்தில் மட்டுமே திரைப்படங்களை நடிக்க சொன்னார்கள்.

படங்களில் நடிக்க மாட்டேன்
கெனிஷா உண்மையான பெண்ணியவாதி. மற்றவர்கள் காசில் உட்கார்ந்து அவர் சாப்பிடவில்லை. முன்னாள் மனைவி குடும்பத்திற்கு மாதம் 25ஆயிரம் மருந்துகள் செலவுக்கு நான் அனுப்பி வந்தேன். சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும், எந்த வேலை செய்து கொண்டும் பிழைத்து கொள்வேன். என்னை மன்னித்து விடுங்கள், என்னால் வேலை செய்ய முடியவில்லை, என் தனிப்பட்ட பிரச்னைகளை தீர்த்த பின்னர் தான் பணிக்கு வருவேன். விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவது இல்லை. எனது படங்கள் திரைக்கு வராது.

இவ்வாறு ரவி மோகன் பேசினார்.

ரவி மோகன் பல இடங்களில் உணர்ச்சி பெருக்கில் பேசும்போது கண்ணீர் விட்டு அழுதார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Bhakt, Chennai
2026-05-17 00:40:50

டுமீல் சினிமா பெல்லோஸ், இப்படி பண்றீங்களே மா