'ஜனநாயகன்' படத்தை கசிய விட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ADDED : 21 hours ago
விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வு குழுவின் முன் ஆய்வில் உள்ளது. இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 3ம் தேதி சட்ட விரோதமாக இந்த திரைப்படம் இணையதளத்தில் வெளியானது. இதுகுறித்து, பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்சன்ஸ் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 9 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உதவி எடிட்டர் பிரசாந்த், செல்வம், பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 'சைபர் கிரைம்' போலீசார் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் ஒரு வருடம் வரை சிறையில் இருக்க வேண்டியது வரும். ஆனால் இதனை எதிர்த்து கைது செய்யப்பட்டவர்களின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.