முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம்
ADDED : 9 hours ago
மலையாளத்தில் இந்த வாரம் அதிரடி என்கிற திரைப்படம் வெளியாகி உள்ளது. டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன், பசில் ஜோசப் என மூன்று முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தை அருண் அனிருத்தன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் பசில் ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். மேலும் மின்னல் முரளி படத்திற்கு இணைந்து கதை எழுதியவரும் இவர்தான்.
இந்த நிலையில் முதல் நாளே ரசிகர்களிடம் அதிரடியான வரவேற்பைப் பெற்றுள்ளது இந்த அதிரடி திரைப்படம். அந்த வகையில் முதல் நாளே உலக அளவில் 10.54 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. மலையாளத்தில் முதல்நாள் அதிக அளவில் வசூலித்த படம் என்கிற பெருமையும் இப்படம் பெற்றுள்ளது. ரசிகர்கள் விரும்பும் மூன்று இளம் நடிகர்கள் இப்படத்தில் நடித்திருப்பதால் இப்படத்திற்கு இளைஞர்களின் ஆதரவு அதிகமாக கிடைத்துள்ளது என இந்த வசூலுக்குக் காரணம் என்கிறார்கள்.