உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி'

ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி'


மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், மிதுன் ஜெய்சங்கர் ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் 'மண்டாடி'. ஆர்.எஸ். எண்போடெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படம் முழுக்க முழுக்க கடலில் பெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ளனர். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மண்டாடி படத்தை ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த படத்தை உலகளவில் உள்ள திரையரங்குகளில் தயாரிப்பாளரே நேரடியாக விநியோகம் செய்து வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !