உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே!

லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே!


தற்போது அட்லி இயக்கும் 'ராக்கா' படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 23வது படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ்- அனிருத் ஆகிய இருவரும் ஹைதராபாத்தில் கம்போசிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இவர் ஏற்கனவே அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தெலுங்கில் வெளியான 'துவ்வடா ஜகன்னாதம், அலா வைகுந்தபுரமுலூ' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ராக்கா படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !