உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்!

நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்!


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன்,சிவராஜ் குமார்,மோகன்லால் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், இவர்களுடன் இணைந்து இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தயாரிப்பு தரப்பில் ஜெயிலர் 2 படத்தை ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு கொண்டு வரும் திட்டத்தில் இருந்துள்ளனர். ஆனால், நெல்சன் இந்த பட பணிகளில் இன்னும் வேலை நிறைய இருக்கிறது என்பதால் செப்டம்பர் முதல் வாரத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர அவகாசம் கேட்டுள்ளதாக படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !