உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு

அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு


'மாற்றம் வரும், மாற்றம் வரும்' என தேர்தலுக்கு முன்பாக சில பல சினிமா நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், தியேட்டர்காரர்கள் என விஜய்க்கு தங்களது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்தார்கள். தேர்தல் முடிவுகளுக்குப் பின் அந்த ஆதரவு இன்னும் அதிகமானது. தேர்தலுக்கு முன்பாக வாய் திறக்காதவர்கள் கூட தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு வாழ்த்து மழைகளைப் பொழிந்தார்கள்.

சினிமாவிலிருந்து ஒருவர் மீண்டும் முதல்வர் ஆகி திரையுலகத்திற்கு பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவார் என்று எதிர்பார்த்தார்கள். அதில் முதல் மாற்றமாக அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்கும் என்று நினைத்தார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

முந்தைய திமுக ஆட்சியில் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டு காலை 9 மணிக்கு மட்டுமே சிறப்புக் காட்சிகள் வழங்கப்பட்டது. அதையே, விஜய் தலைமையிலான இந்த தவெக அரசும் பின்பற்றுகிறது.

நாளை வெளியாக உள்ள 'கருப்பு' படத்திற்கு காலை 9 மணி காட்சிக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கே முதல்வர் விஜய் புகைப்படத்துடன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கிவிட்டதைப் போல இப்படி முதல்வர் புகைப்படத்துடன் நன்றி சொல்கிறீர்கள், முந்தைய ஆட்சியில் இப்படியெல்லாம் நன்றி சொன்னதில்லையே என பலரும் கமெண்ட் செய்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !