sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

மாத ராசி பலன்

/

விருச்சிகம்

/

விருச்சிகம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

மாத ராசி பலன் : விருச்சிகம்
16 செப் 2025

முந்தய மாத ராசி பலன்

rasi

விருச்சிகம்

விருச்சிகம்

விசாகம் 4 ம் பாதம்
வேகமும் விவேகமும் கொண்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு புரட்டாசி  நன்மையான மாதம். மாதத்தின் முற்பகுதியில் அஷ்டம ஸ்தானத்தில் குரு சஞ்சரித்தாலும், அவருடைய பார்வைகள் 12, 2, 4 ம் இடங்களுக்கு கிடைப்பதால் விரயச்செலவு கட்டுப்படும். மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவு விலகும். பணப்புழக்கம் இருக்கும். தாய் வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். அக்.8 முதல் அதிசாரமாக பாக்ய ஸ்தானத்திற்கு செல்லும் குருவால் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். ராசிக்கு குருபார்வை கிடைப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி, பிரச்னை எல்லாம் விலக ஆரம்பிக்கும். செல்வாக்கு உயரும். பட்டம் பதவி தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். ஜீவன ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடுவோர் நிதானமாக செயல்படுவது நல்லது. புதிய ஏஜென்சி எடுக்க முயற்சிப்பவர்கள் மார்க்கெட் நிலவரம் அறிந்து அதன் பின் முடிவிற்கு வரவும்.
சந்திராஷ்டமம்: அக். 12.
அதிர்ஷ்ட நாள்: செப். 18, 21, 27, 30. அக். 3, 9.
பரிகாரம் வியாழக்கிழமை நவகிரக குருபகவானை வழிபட நன்மை உண்டாகும்

அனுஷம்
தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட உங்களுக்கு புரட்டாசி யோகமான மாதம். உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதியான சூரியன் மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசு வழி முயற்சிகள் வெற்றியாகும். புதிய தொழில் தொடங்க, வெளிநாடு செல்ல எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். மூடி வைத்திருந்த தொழிலை மீண்டும் தொடங்கும் அளவிற்கு வாய்ப்பு உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். அக். 7 வரை அஷ்டம ஸ்தானத்தில் குரு சஞ்சரித்து வந்தாலும், அக். 8 முதல் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நெருக்கடி, பிரச்னை, போராட்டங்கள் எல்லாம் விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். 4 ம் இட ராகுவும், விரய ஸ்தான செவ்வாயும் ஒரு பக்கம் அலைச்சல், மறுபக்கம் செலவை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு வேலையையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். அரசு பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு வரும். புதிய தொழில் தொடங்க வங்கியில் கேட்ட பணம் கிடைக்கும். செப்.29 முதல் புதனும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவு கட்டுக்கடங்காமல் போகும். புதிய முதலீடுகளில் அதிகபட்ச கவனம் தேவை.  ஆடம்பரத்திற்கும் அலட்சியத்திற்கும் இடம் கொடுக்காமல் அவசிய பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். குடும்பத்தினர் ஆலோசனைகளை ஏற்பதும், தம்பதியர் விட்டுக் கொடுப்பதும் மிக  அவசியம்.
சந்திராஷ்டமம்: அக். 12, 13.
அதிர்ஷ்ட நாள்: செப். 17, 18, 26, 27. அக். 8, 9, 17.
பரிகாரம் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வாழ்வில் வளம் உண்டாகும்.

கேட்டை
எந்த ஒன்றிலும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு வெற்றி பெறும் உங்களுக்கு புரட்டாசி  நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். விரய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதுடன் செப். 29 முதல் புதனும் விரய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆவதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்தினர் வழியில் நெருக்கடி ஏற்படும். தொழில், வேலை என அலைச்சல் உண்டாகும். அக். 8 முதல் குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியை பார்ப்பதால், கடலில் மூழ்கிக் கொண்டிருந்தவருக்கு படகு கிடைத்தது போல் மனதில் நம்பிக்கை உண்டாகும். எல்லாவற்றையும் சமாளிக்கும் அளவிற்கு உங்கள் நிலை மாறும். கடந்த கால நெருக்கடி ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சகோதரர் வழியில் உதவி கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொழிலாளர்கள் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பூர்வீக சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், அக்.10 முதல் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் குடும்பம், தொழிலில் இருந்த போராட்ட நிலை மாறும். மனதில் நிம்மதி உண்டாகும். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய வாய்ப்பு தேடிவரும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தம்பதிக்குள் இணக்கம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: அக்.13, 14.
அதிர்ஷ்ட நாள்: செப்.18, 23, 27. அக். 5, 9.
பரிகாரம் உலகளந்த பெருமாளை வழிபட நன்மை அதிகரிக்கும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us