sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

மாத ராசி பலன்

/

கும்பம்

/

கும்பம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

மாத ராசி பலன் : கும்பம்
16 செப் 2025

முந்தய மாத ராசி பலன்

rasi

கும்பம்

கும்பம்

அவிட்டம் 3, 4 ம் பாதம்
நேர்மையான முறையில் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு  புரட்டாசி  நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் செயல்களில் தடைகளை ஏற்படுத்துவார், அலைச்சலை அதிகரிப்பார், நிம்மதியற்ற நிலையை உண்டாக்குவார். அக்.7 வரை பாக்கிய ஸ்தானத்திற்கு குரு பார்வை இருப்பதால் எடுத்த வேலைகளை முடிக்கக் கூடிய நிலை உண்டாகும். பெரிய மனிதர்கள் தொடர்பும், ஆதரவும் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தெய்வ பலம் உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். அக்.8 முதல் குரு 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயும், ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகுவும் எதிர்மறையான பலன்கள்,  நெருக்கடிகளை ஏற்படுத்துவர். மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். எடுக்கும் வேலைகள் இழுபறியாகும். ஞான மோட்சக்காரகன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய நண்பர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். சிலருக்கு வாழ்க்கையின் திசையே மாறும். அக். 9 வரை களத்திரக்காரகன் சுக்கிரனும் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாலினரால் சிலர் அவமானம், குடும்பத்தில் பிரச்னையை சந்திக்க நேரிடும். பணியில் கவனம் செல்லாமல் கேளிக்கை, சந்தோஷம் என உங்கள் மனநிலை மாறும் என்பதால் விழிப்புடன் செயல்படுவது நல்லது. 
சந்திராஷ்டமம்: செப். 21.
அதிர்ஷ்ட நாள்: செப்.17, 18, 26, 27. அக். 8, 9.
பரிகாரம் பைரவரை வழிபட்டு வர சங்கடம் அனைத்தும் நீங்கும்.

சதயம் 
மனதில் இருப்பதை வெளிக்காட்டாமல் நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு,  புரட்டாசி திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். செப்.28 வரை புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். விற்க முடியாத சொத்தை விற்க முடியும். வியாபாரிகள் கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு செய்வதற்காக வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். அக்.7 வரை குரு சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எடுத்த வேலைகளை முடித்துக் கொள்ள முடியும். அக்.8 முதல் சத்ரு ஸ்தானத்திற்கு குரு அதிசாரமாக செல்வதால் எதிர்ப்பு தோன்றும். உடல் நிலையில் சிறு பிரச்னைகள் வந்து போகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும், குடும்பம் நட்பு வகையில் எதிர்பாராத பிரச்னைகளை உண்டாக்குவர். புதியவர்களால் சங்கடம் தோன்றும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்துவார். வீண் விவகாரத்தில்  ஈடுபட வைத்து அதனால் நெருக்கடிகளை சந்திக்க வைப்பார். அரசு பணியாளர்கள் மாதம் முழுவதும் தங்கள் பணியில் கவனமாகவும், நேர்மையாகவும் இருப்பது நல்லது. வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் அரசுக்கு அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால்  யோசித்து செயல்படுவது நல்லது. வாழ்க்கைத் துணை, உறவினர்களை அனுசரித்துச் செல்வது சங்கடங்களில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
சந்திராஷ்டமம்: செப். 22.
அதிர்ஷ்ட நாள்: செப். 17, 26. அக். 4, 8.
பரிகாரம் அஷ்டபுஜ துர்கையை வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.

பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்
பொது நலனை பெரிதாக எண்ணும் உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய மாதமாகும். குரு சஞ்சாரம் அக். 7 வரை 5 ம் இடத்தில் இருப்பதால் எல்லாவற்றையும் சமாளித்திடும் நிலை உண்டாகும். உங்கள் வேலைகளில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். வருமானம் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். அக். 8 முதல் 6 ம் இடத்தில் சஞ்சரித்தாலும், அவருடைய பார்வை 10ம் இடத்திற்கு கிடைப்பதால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். நிம்மதியான துாக்கம் இல்லை, வீண் செலவு ஆகிறதே என்ற நிலைகள் மாறி செலவு கட்டுப்படும். மனதில் நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் தீரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். செப். 28 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கவனம் தேவை. எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படாமல் யோசித்து செயல்பட்டால் பிரச்னை நெருங்காது. 
சந்திராஷ்டமம்: செப். 23.
அதிர்ஷ்ட நாள்: செப். 17, 21, 26, 30. அக். 3, 8, 12.
பரிகாரம் அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us