
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத் : குவைத் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் பஹாஹீல், மஹ்பூல்லா, மலியா உள்ளிட்ட பகுதிகளில் மீலாதுப் பெருவிழா வெகு சிறப்புடன் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர்கள் முஹம்மது உமர் பலாஹி, அர்ஷத் ஹபீப், இர்பான் நத்வி, சம்வேல் பர்வேஸ், முஹம்மது சமோயில் பலாஹி உள்ளிட்டோர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினர்.
நபிகளாரின் சிறப்புக்கள் குறித்தும், அவரது வாழ்க்கையை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்த உரையில் வலியுறுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
--- குவைத்தில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் காஹிலா
Advertisement