/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அபுதாபியில் புனித மௌலித் மஜ்லிஸ் மற்றும் நூல் வெளியீடு விழா
/
அபுதாபியில் புனித மௌலித் மஜ்லிஸ் மற்றும் நூல் வெளியீடு விழா
அபுதாபியில் புனித மௌலித் மஜ்லிஸ் மற்றும் நூல் வெளியீடு விழா
அபுதாபியில் புனித மௌலித் மஜ்லிஸ் மற்றும் நூல் வெளியீடு விழா
செப் 19, 2025

அபுதாபி : அபுதாபி ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக புனித மௌலித் மஜ்லிஸ் மற்றும் நூல் வெளியீடு விழா கடந்த சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இதில் அமீரகத்தை சார்ந்த அரபுக்களும் ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் நாட்டினை சார்ந்த மக்களும் பக்தி பெருக்குடன் பங்கேற்ற புனித கஸீத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெற்றது.
தொடர்ந்து குத்புஸ்ஸமான் ஷம்ஷுல் வுஜூத் ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா கத்தஸல்லாஹூ ஸிர்ரஹூல் அழீம் அவர்கள் இயற்றிய வஹ்ததுல் வுஜூத் எனும் பத்து அடிகளை கொண்டகஸீதாவிற்கு எகிப்து நாட்டைச் சார்ந்த Dr.அஷ்ஷெய்கு மஸீதி அஸ்ஹரி அவர்கள் 150 பக்கங்களுக்கு விளக்கவுரை(தஃப்ஸீர்) செய்த நூல் வெளியீடும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கஸீதாவை பற்றி சிலாகித்து பேசிய Dr.அஷ்ஷெய்கு மஸீதி அஸ்ஹரி அவர்கள் தவ்ஹீத் ஞானத்தினை மிகவும்
இரத்தின சுருக்கமாக அஷ்ஷெய்கு கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் சுருக்கமான பத்து அடிகளில் தவ்ஹீதின் பலநிலைகளை விளக்கியுள்ளார்கள் என்றும் இஃது அவர்களுக்கே உரிய பூரண ஞானம் என்றும் சிலாகித்து பேசினர். இது அவர்களின் ஆத்மீக படித்தரத்தை உணர்த்துகிறது என்றும் பேசினர்.
Dr.அஷ்ஷெய்கு மஸீதி அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அஷ்ஷெய்கு கலீல் அவ்ன் மௌலானா அவர்களின் தந்தையார் குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா யாஸீன் மௌலானா (ரலி) அவர்களின் ஆன்மீக அனுபவங்களை விளக்கும் 'யவானிஉ அஸ்மாருந் நஅமாஉ' எனும் நூலுக்கு இதே போன்று தஃப்ஸீர் எழுதியவர்கள். அந்த நூலின் வெளியீடும் கடந்த ஆண்டு அபுதாபி ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக சீரும் சிறப்புடன் நடைபெற்றதும் இங்கு குறிப்பிடதக்கது.
அமீரகத்தை பூர்வீகமாக கொண்ட பண்டைய மதினா நகரின் கஸ்ரஜ் கோத்திரத்தை சார்ந்த Dr.அஹ்மத் கஸ்ரஜ் (ஓய்வு பெற்ற மேனாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி) அவர்கள் அமீரகத்தில் வாழும் பூர்வீக குடிமக்கள் பர்ஸன்ஜி மௌலிதை பல வருடங்களாக ஓதி வருகிறார்கள் என்றும் பேசினார்கள்.
பன்னாட்டு மக்கள் பங்கேற்பு
நூலின் பிரதிகளை அமீரகத்தை சார்ந்த அரபுக்களும், ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் நாட்டை சார்ந்தவர்களும்பெற்றுக் கொண்டனர். விழா ஏற்பாட்டினை அபுதாபி ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினர் செய்திருந்தனர். இதில் துபை, ஷார்ஜா பகுதிகளைச்சார்ந்த மெய்ஞ்ஞான சபையினர்கள் மற்றும் அமீரக அரபுக்களும்,ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் நாட்டினரும் பங்கு கொண்டனர்.
---- அபுதாபியில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் காஹிலா
Advertisement