பசுபிக் கடலில் கடும் நிலநடுக்கம்: அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!
பசுபிக் கடலில் கடும் நிலநடுக்கம்: அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!
UPDATED : ஜூலை 30, 2025 04:47 PM
ADDED : ஜூலை 30, 2025 06:13 AM
முழு விபரம்

மாஸ்கோ: பசுபிக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, ரஷ்யா, ஜப்பான், சீனா, அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் துாரக்கிழக்கு பகுதியில் சுனாமி அலைகள் தாக்கியதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தூரக்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8 ஆக பதிவாகி உள்ளது. இதனால், ரஷ்யா மற்றும் ஜப்பானின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செவெரோ-குரில்ஸ்கில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியதால், அங்கு வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
ரஷ்யாவின் செவெரோ-குரில்ஸ்க் மற்றும் வடக்கு ஜப்பானின் கரைகளை சுனாமி தாக்கியது.அப்பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்கவும், அனைத்து அவசர வழிமுறைகளையும் பின்பற்றவும் வலியுறுத்தினர்.
வடமேற்கு ஹவாய் தீவுகள் மற்றும் ரஷ்யாவின் கடற்கரையோரப் பகுதிகள் சீற்றத்துடன் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
சுனாமியின் தாக்கம் பெரிய அளவில் இல்லாததால், எச்சரிக்கை வெளியிட்ட நாடுகள் அதை வாபஸ் பெற்றுள்ளன. அமெரிக்காவின் ஒரு சில மாநிலங்களில் மட்டும் இன்னும் சுனாமி எச்சரிக்கை அமலில் உள்ளது.