விமானப் பயணத்திற்கு இடையூறு: பிரிட்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
விமானப் பயணத்திற்கு இடையூறு: பிரிட்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
ADDED : ஜூலை 29, 2025 06:51 PM

லண்டன்: விமான பயணத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கோஷம் எழுப்பியதாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஈஸிஜெட் விமானம், லண்டன் லூடன் விமான நிலையத்திலிருந்து கிளாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டது. இந்த பயணத்தின் போது இந்திய வம்சாவளியை சேர்ந்த அபய் தேவதாஸ் நாயக் 41, கோஷமிட்டு, பயணத்திற்கு இடையூறு விளைவித்தாக குற்றம்சாட்டப்பட்டார்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியது. அதன் அடிப்படையில் ஸ்காட்லாந்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இது குறித்து ஸ்காட்லாந்து போலீசார் கூறியதாவது:
சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவில் குற்றம் சாட்டப்பட்டவர், அமெரிக்காவுக்கு அழிவு, டிரம்பிற்கு அழிவு என்று கூச்சலிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் காலை 8.20 மணியளவில் கிளாஸ்கோவிற்கு வந்த விமானத்தில் வந்த அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
அவரது பெயர் அபய் தேவதாஸ் நாயக் என்பதும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவர், கிளாஸ்கோ நகரத்தின் எல்லையில் உள்ள பைஸ்லி ஷெரீப் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு தற்போது கோர்ட் காவலில் உள்ளார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.