இணைய தாக்குதல் எதிரொலி; ஐரோப்பிய நாடுகளில் விமான சேவை பாதிப்பு
இணைய தாக்குதல் எதிரொலி; ஐரோப்பிய நாடுகளில் விமான சேவை பாதிப்பு
ADDED : செப் 20, 2025 03:22 PM

லண்டன்:லண்டன், பிரஸல்ஸ், பெர்லின் விமான நிலையங்களில் நடந்த சைபர் தாக்குதல் காரணமாக, விமான போக்குவரத்து சேவை முடங்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் சேவை அளிக்கும் நிறுவனத்தை குறி வைத்து இணையத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால்
லண்டன், பிரஸல்ஸ், பெர்லின் விமான நிலையங்களில் பயணிகள் சேவை முற்றிலும் முடங்கியது.
இந்த விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் புறப்படுவது, தரை இறங்குவது ஆகிய சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதனால் ஐரோப்பிய நாடுகளில் விமான பயணம் மேற்கொண்டுள்ள பல்லாயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் தொழில்நுட்ப சேவை வழங்கும் காலின்ஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தியது யார் என்று விசாரணை தீவிரமாகியுள்ளது.
எனினும் ஜெர்மனியின் முக்கிய விமான நிலையம் ஆன பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் பாதிப்பு எதுவும் இல்லை. அதேபோல ஜூரிச் விமான நிலையமும் பிரச்சனை இன்றி செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.