டல்லாஸ் விமான நிலையங்களில் தகவல் தொடர்பு சேவைகள் துண்டிப்பு: 1800 விமானங்கள் தாமதம்
டல்லாஸ் விமான நிலையங்களில் தகவல் தொடர்பு சேவைகள் துண்டிப்பு: 1800 விமானங்கள் தாமதம்
ADDED : செப் 20, 2025 11:14 AM

வாஷிங்டன்; டல்லாசில் உள்ள விமான நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 1800க்கும் அதிகமான விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் டல்லாசில் இரண்டு விமான நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு விமான நிலையங்களிலும் எப்போதும் ஏராளமான பயணிகள் விமானங்களில் பறப்பதைக் காணலாம்.
இந் நிலையில் அங்கு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கிட்டத்தட்ட 1800க்கும் அதிகமான விமானங்களின் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலகத்தில் தொலைதொடர்பு சாதனங்கள் செயலிழந்ததே இதற்கு காரணம்.
விமான நிலைய கண்காணிப்பு கோபுரங்களில் ராடார் மற்றும் செல்போன் சிக்னல்கள் சரியாக செயல்படாததால் விமான கட்டுப்பாட்டு அறைகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 2 விமான நிலையங்களில் பல்வேறு விமான நிலையங்களின் 1800க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டது.
அமெரிக்க விமான நிறுவனங்களின் 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 500க்கும் அதிகமான விமானங்கள் தாமதமாகின. விமான நிலையத்துக்கு வரும் மற்றும் செல்லும் 700 விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.