நிலத்தை அளவீடு செய்ய ரூ.25 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் விஏஓ!
நிலத்தை அளவீடு செய்ய ரூ.25 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் விஏஓ!
ADDED : செப் 22, 2025 02:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலத்தில் நிலத்தை அளவீடு செய்ய ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ ராமசாமி, 51, என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மகேந்திரன். இவரது வீட்டு மனை இடத்தை அளவீடு செய்து, தனி பட்டா பெற, ஆத்துார் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது நிலத்தை அளவீடு செய்ய ரூ.25 ஆயிரம் வி.ஏ.ஓ., ராமசாமி லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து, மகேந்திரன், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து அவர்களின் அறிவுரைப்படி, விஏஓ ராமசாமி, 51, என்பவரிடம் ரூ.25 ஆயிரத்தை மகேந்திரன் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஏஓ ராமசாமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.