sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிறுபான்மையினர் பிரச்னை என்றால் ‛‛ஆக்டிவ் மோடு'', தமிழக பிரச்னைனா ‛‛கோமா மோடு'': சினிமா போராளிகளின் ‛‛டபுள் ஆக்ட் பாலிடிக்ஸ்''

/

சிறுபான்மையினர் பிரச்னை என்றால் ‛‛ஆக்டிவ் மோடு'', தமிழக பிரச்னைனா ‛‛கோமா மோடு'': சினிமா போராளிகளின் ‛‛டபுள் ஆக்ட் பாலிடிக்ஸ்''

சிறுபான்மையினர் பிரச்னை என்றால் ‛‛ஆக்டிவ் மோடு'', தமிழக பிரச்னைனா ‛‛கோமா மோடு'': சினிமா போராளிகளின் ‛‛டபுள் ஆக்ட் பாலிடிக்ஸ்''

சிறுபான்மையினர் பிரச்னை என்றால் ‛‛ஆக்டிவ் மோடு'', தமிழக பிரச்னைனா ‛‛கோமா மோடு'': சினிமா போராளிகளின் ‛‛டபுள் ஆக்ட் பாலிடிக்ஸ்''

143


UPDATED : செப் 23, 2025 10:56 AM

ADDED : செப் 22, 2025 02:45 PM

Google News

143

UPDATED : செப் 23, 2025 10:56 AM ADDED : செப் 22, 2025 02:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது தமிழ் சினிமா உலகில் சிலர் இருக்கிறார்கள். உலகில் எங்கோ நடக்கும் பிரச்னைகளுக்கு இந்தியாவை குறை சொல்வார்கள். அதே பிரச்னை தமிழ்நாட்டில் நடந்தால் கண்ணை மூடிக்கொண்டு ‛‛கோமா'' நிலைக்கு சென்று விடுவார்கள். அப்போது மட்டும் அவர்களது ஐம்புலன்களும் அடங்கி, ஒடுங்கி அமைதியாகிவிடும்.

அப்படித்தான் சமீபத்தில் இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் மூக்கை நீட்டி கருத்து கந்தசாமிகளாகி உள்ளனர் சில சினிமாக்காரர்கள். நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ்ராஜ், இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர் ஆகியோர் தான் அந்த பிரகஸ்பதிகள்.

சில நாட்களுக்கு முன் சென்னையில் பாலஸ்தீன இனப் படுகொலையை தடுக்க கோரி பேரணி மற்றும் நடந்த ஒரு கூட்டத்தில் இவர்கள், இனப்படுகொலை எங்கு நடந்தாலும் அங்கு குரல் கொடுக்க வேண்டும் என்றார்கள். அதோடு பிரகாஷ்ராஜ், அமீர் ஆகியோர் பேசும்போது, காஸா போருக்கு அமெரிக்க துணை போகிறது என்றவர்கள், பிரதமர் மோடியும் அதற்கு துணை நிற்கிறார் என்று பேசினார்கள்.

உண்மை என்ன:


உண்மையில் போரை நிறுத்த வேண்டும் என்று தான் பிரதமர் மோடியும் வலியுறுத்துகிறார். ஏதோ இந்தியா இஸ்ரேலுக்கு துணை போவது போன்றும், பாலஸ்தீன நாட்டுக்கு துரோகம் செய்வது போன்றும் இவர்களின் பேச்சு இருந்தது. பிரதமராக மோடி பதவியேற்ற இத்தனை ஆண்டுகளில் பாலஸ்தீன நாட்டிற்கு நிதி உதவி, உள் கட்டமைப்பு உள்ளிட்ட பல விஷயங்களுக்கு அதிகம் உதவி செய்யப்பட்டுள்ளன.

அதிக நிதி


கடந்த ஓராண்டுகளில் மட்டும் இந்தியா சார்பில் அந்நாட்டிற்கு உள் கட்டமைப்பு, ஐடி டெக் பார்க், மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு 141 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி அளித்துள்ளது. மேலும் பாலஸ்தீனத்திற்கு உதவும் ஐக்கிய நாடுகளின் நிதி அமைப்பிற்கு ஆண்டுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை 2018 முதல் இந்தியா வழங்கி வருகிறது.

Image 1472684

மோடிக்கு கவுரவம்


1980ல் இந்தியாவில் பாலஸ்தீன நாட்டிற்கு டில்லியில் தூதரகம் துவங்கப்பட்டது. அதன்பின் இந்தியாவில் பல பிரதமர்கள் பதவி வகித்தனர். அவர்கள் யாருக்கும் கிடைக்காத பாலஸ்தீன நாட்டின் உயரிய விருது 2018ல் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு வழங்கி கவுரவித்தது. இந்த விருதை வென்ற முதல் இந்திய பிரதமர் மற்றும் அந்நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி மோடியின் உதவியை பாராட்டி அந்நாட்டு அரசு கவுரவித்த நிலையில் அது கூட தெரியாமல் மோடியை குற்றம் சொல்கிறார்கள் பிராஷ்ராஜ், அமீர் போன்றோர். இப்படிப்பட்டவர்களை அழைத்து மேடையில் பேச வைத்திருக்கின்றனர். கொடைக்கானலில் வனத்திற்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக வீடு கட்டியவர் இந்த பிரகாஷ்ராஜ். அவர் ஏதோ உத்தமர் போல பேசுகிறார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எங்கு அநீதி நடந்தாலும் குரல் கொடுக்க வேண்டும் என இந்த நான்கு சினிமா பிரபலங்களும் பேசுகிறார்கள். ஏதோ ஒரு நாட்டில் நடக்கும் இனப்படுகொலை பற்றி பேசியவர்கள் தமிழகத்தில் நடந்த பல அநீதிகளுக்கு என்றாவது குரல் கொடுத்துள்ளார்களா. லாக்கப் மரணம் பற்றி படம் எடுத்து கல்லா கட்டினார் வெற்றிமாறன். ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சியில் மட்டும் 25 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. அதுபற்றி அவர்கள் வாய் திறக்கவில்லை.

அதேபோல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணம், வேங்கைவயல் பிரச்னை, பல ஆணவ படுக்கொலைகள் உள்ளிட்ட எதற்கும் இவர்கள் வாயை திறக்கவில்லை. ஒரு கண்டன கூட்டம் கூட நடத்தவில்லை. அவ்வளவு ஏன், ஒரு அறிக்கை கூட விட்டதில்லை.

இஸ்லாமியர்கள் என்பதற்காக அல்ல நாங்கள் மதத்திற்கு அப்பாற்பட்டு குரல் கொடுக்கிறோம். எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, கொல்லப்படுகிறார்களோ அங்கு ஒரு கலைஞனாய், மனிதனாய் குரல் கொடுக்க வேண்டும் என்கின்றனர்.

Image 1472685

நிஜத்தில் இவர்கள் அப்படி செய்தார்களா. நம் அண்டை நாடான வங்க தேசத்தில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு எதிராக பல வன்முறை சம்பவங்கள் நடந்தேறின. அப்போதொல்லாம் இவர்கள் வாயை பசை போட்டு ஒட்டிக்கொண்டது ஏன்.

இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னையை வைத்து பேரணி, கண்டன கூட்டம் நடத்தியவர்கள் பல ஆண்டுகளாக ஏமன் நாட்டில் நடந்து வரும் போர் பற்றி ஏன் பேசவில்லை. அங்கு நடப்பது இனப்படுகொலையாக தெரியவில்லை.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் பல ஆண்டுகளாக நடக்கிறது. அப்போது எல்லாம் குரல் கொடுக்காத இவர்கள் இப்போது மட்டும் ஏன் கண்டனம் தெரிவிக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதில் சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை கவர இப்படியொரு கண்டன கூட்டம், ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளனர். அந்தக்கூட்டத்தில் இருந்த அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் எந்த கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதே அதற்கு சாட்சி.






      Dinamalar
      Follow us