ADDED : டிச 29, 2025 06:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆங்கில புத்தாண்டு தினத்தை மையமாக வைத்து கேளிக்கை நிகழ்ச்சிகள், மது விருந்துகள் நடத்தப்படுவதை, தி.மு.க., அரசு தடை செய்ய வேண்டும். கடந்த நான்கரை ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறி வருகிறார். ஆனால், தமிழகத்தில் மது குடிப்போரின் எண்ணிக்கையை தி.மு.க., அரசு அதிகரித்துள்ளது.
தி.மு.க.,வும், த.வெ.க.,வும் கிறிஸ்துவர்களை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில், போட்டி போட்டு அந்த மக்களை ஏமாற்றுகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தை இயக்குவதே தி.மு.க., தான். இரு கட்சிகளுக்கும் மறைமுகமாக அல்ல, நேரடியாகவே உறவு உள்ளது.
தி.மு.க.,வின் 'பி டீம்' தான் த.வெ.க., ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு நடிகரை வைத்து, கட்சி ஆரம்பித்து, இயக்குவது தி.மு.,க., வேலை. கடந்த தேர்தலில் கமல் போல, தற்போது விஜயை தி.மு.க., உருவாக்கி உள்ளது.
- அர்ஜுன் சம்பத், தலைவர், ஹிந்து மக்கள் கட்சி

