/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நாட்டுப்புற கிராமிய நலச்சங்க மாநாடு
/
நாட்டுப்புற கிராமிய நலச்சங்க மாநாடு
ADDED : டிச 29, 2025 06:06 AM

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் பம்பை, உடுக்கை, கை சிலம்பு, நாட்டுப்புற நலச் சங்க மாநாடு நடந்தது.
அவலுார்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் கதிர்வேல், செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்கள் செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் வாழ்த்தி பேசினர். அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பம்பை, உடுக்கை, சிலம்பாட்ட கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருதுகளும், இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கடைவீதியிலிருந்து பம்பை, உடுக்கை, கைசிலம்புடன் ஆடி பாடி, நாடக கலைஞர்கள் வேடமிட்டு ஊர்வலமாக வந்தனர்.
ஊராட்சி தலைவர் செல்வம், முன்னாள் தலைவர்கள் கலா ராஜவேலாயுதம், பழனி, ஒன்றிய கவுன்சிலர் ஷாகின் அர்ஷத், துணைத் தலைவர் சரோஜா ஐயப்பன், மணியரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

