/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'பா.ம.க., நிறுவனரிடம் சமூக நீதியை அன்புமணி கற்றுக்கொள்ள வேண்டும்' காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி

ADDED : ஆக 28, 2025 11:49 PM
விருதுநகர்: பீஹாரில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸிடம் சமூக நீதி குறித்து அன்புமணி கற்றுக்கொள்ள வேண்டும்', என விருதுநகரில் காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
விருதுநகர் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் லோக்சபா உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு டூவீலர்களை வழங்கிய எம்.பி., மாணிக்கம் தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அமைச்சர் முருகன் கருத்தால் ஆர்.எஸ்.எஸ்., கட்டுப்பாட்டில் அ.தி.மு.க., செயல்படுகிறது தெளிவாக தெரிகிறது.
பீஹாரில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. நிதிஷ்குமார் நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏமாற்று வேலை. பா.ம.க., நிறுவனர் ராமதாஸிடம் சமூக நீதி குறித்து அன்புமணி கற்றுக்கொள்ள வேண்டும்.
சாலையோர வியாபாரிகளுக்கான மானிய கடன் வழங்கல் அடுத்த 5 ஆண்டுகள் நீட்டிப்பு அறிவிப்பு பலமாக இருக்கலாம். ஆனால் எத்தனை பேருக்கு கிடைத்துள்ளது, எத்தனை பேருக்கு கிடைக்காமல் உள்ளது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்., என்றார்.