ADDED : ஆக 28, 2025 11:50 PM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
அருப்புக்கோட்டை நகர ஒன்றிய ஹிந்து முன்னணி சார்பாக, பாலையம்பட்டி, அன்பு நகர், மணிநகரம், இ.பி., காலனி, புளியம்பட்டி, வெள்ளக்கோட்டை உள்ளிட்ட 13 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. நேற்று மாலை விநாயகர் சிலை ஊர்வலம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து புறப்பட்டது.
இதற்கு மதுரை கோட்ட ஆர்.எஸ்.எஸ்., தலைவர் சிவலிங்கம் தலைமை வகித்தார். இணை அமைப்பாளர் பொன்னையா துவக்கி வைத்தார். நெசவாளர் காலனி, புதிய பஸ் ஸ்டாண்ட், முஸ்லிம் பஜார், சிவன் கோயில், அண்ணாதுரை சிலை, பந்தல்குடி ரோடு வழியாக பெரிய கண்மாய்க்கு சென்று 13 சிலைகளும் பூஜை செய்யப்பட்டு கரைக்கப்பட்டது. அதன்பின் இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
ஏற்பாடுகளை நகர இந்து முன்னணி தலைவர் குமார், ஒன்றிய தலைவர் பாண்டி, மாவட்ட செயலாளர் பிரபு, ஆர். எஸ்.எஸ்., மாவட்ட, நகர ஒன்றிய நிர்வாகிகள் செய்தனர். மாவட்ட எஸ்.பி., கண்ணன், ஏ.எஸ்.பி., மதிவாணன் தலைமையில் டி.எஸ்.பி., க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.