/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேறு கிராம மக்களுக்கு பட்டா வழங்க எதிர்ப்பு
/
வேறு கிராம மக்களுக்கு பட்டா வழங்க எதிர்ப்பு
ADDED : டிச 28, 2025 05:04 AM
வானுார்: வானுார் அருகே வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தில் திரண்டு மனு அளித்தனர்.
வானுார் ஊராட்சிக்குட்பட்ட நையினார்பாளையம் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் குளம் புறம்போக்கு பகுதியில் வீடுகட்டி வசித்து வருகின்றனர். அவர்களுக்கு, தமிழக அரசு உத்தரவின் பேரில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டு வருவாய் துறை மூலம் இலவச மனைப்பட்டா வழங்க வானுார் தாசில்தார் வித்யாதரனுக்கு உத்தரவிட்டார்.
இதில் நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25 பேருக்கும், மாற்று கிராமங்களைச் சேர்ந்த வீடற்ற 5 பேருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனையறிந்த புறம்போக்கு பகுதியில் வசித்து வருபவர்கள் நேற்று வானுார் தாலுகா அலுவலகத்தில் திரண்டனர்.
பின், தாசில்தார் வித்யாதரனிடம் மனு அளித்தனர். அதில் தங்கள் கிராமங்களில் தொடர்ந்து வசித்து வரும் வீடற்றவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். வேறு கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்க கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு தாசில்தார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

