/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சர்வதேச இளைஞர் தின மாரத்தான் ஓட்டம்
/
சர்வதேச இளைஞர் தின மாரத்தான் ஓட்டம்
ADDED : செப் 11, 2025 03:14 AM

விழுப்புரம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சா ர்பில் சர்வதேச இளைஞர் தின விழாவை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம் நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார். பின், அவர் கூறுகையில், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க செயல்முறைகளின்படி விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகளில் செயல்பட்டு வரும் செஞ்சுருள் சங்க மாணவர்கள், பால்வினைநோய், காசநோய், ரத்த தானம் மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சர்வதேச இளைஞர் தின விழாவை முன்னிட்டு 5 கி.மீ., மாரத்தான் ஓட்டம் நடந்தது. மாவட்டத்தில் கல்லுாரிகளை சேர்ந்த 700 மாணவர்கள் கலந்து கொண்டு ஓடினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அலவிலான மாரத்தான் ஓட்டத்தில் பங்குபெற தகுதி பெற்றனர்.
கல்லுாரி மாணவர்கள் மற்றும் நடன கலைக்குழு மூலம் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நாடகம், ஒயிலாட்டம் நடந்தது,' என்றார்.
அப்போது, சுகாதார துறை இணை இயக்குநர் லதா, மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், காசநோய் துணை இயக்குநர் சுதாகர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் ரவிக்குமார், முதன்மை மருத்துவ அலுவலர் ரவிராஜா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், எய்ட்ஸ் கட்டுப்பாடு அலகு மாவட்ட திட்ட மேலாளர் நல்லதம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், பங்கேற்று ஓடிய 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் நிலை தடுமாறி ஆங்காங்கே கீழே விழுந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.