/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிலம்பத்தில் அசத்தும் அண்ணன்,தங்கைகள்
/
சிலம்பத்தில் அசத்தும் அண்ணன்,தங்கைகள்
ADDED : செப் 11, 2025 03:14 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகள் சிலம்பத்தில் அசத்தி வருகின்றனர்.
மண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் பரசுராமன்-தமிழ்செல்வி ; இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்த தம்பதியின் மூத்த மகன் சிவபாலன்,17; இவர் முட்டத்துார், ஒய் காப் மேல்நிலைப்பள்ளியில், பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.
சிலம்பத்தில் இவருக்கு ஆர்வம் அதிகரித்ததால் முறைப்படி கற்றார். கடந்த 2024 ம் ஆண்டு பள்ளி கல்வி துறை சார்பில் நடந்த மாநில சிலம்பம் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பெற்றார்.
இந்தாண்டு கடலுார், திருவண்ணாமலை, புதுச்சேரி , திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் நடந்த மண்டல, மாநில போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார்.
இவரது தங்கை கனிஷ்கா,10; மண்டகப்பட்டு, அரசு தொடக்கப்பள்ளி, 5ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சிலம்பம் கற்று விழுப்புரம் ,ஈரோட்டில் கடந்த, 2024ல் நடந்த மாவட்ட, மாநில போட்டிகளில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
மற்றொரு தங்கை திக்க்ஷா ,7; முட்டத்துார், அரசு தொடக்கப்பள்ளி இரண்டாம் வகுப்பு படிக்கிறார். இவரும் சிலம்பம் கலையை கற்று, இந்தாண்டு மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
இந்த மூவரையும் பயிற்சியாளர் சுரேந்தர், கிராம மக்கள் உள்ளிட்டோர், பாராட்டி, ஊக்கப்படுத்தி வருகின்றனர்.