ADDED : ஜன 01, 2026 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில், தொழிலாளர்களுக்கான புதிய சட்டத் தொகுப்புகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் வாயிலில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட பொதுச்செயலாளர் அருளரசன் தலைமை தாங்கினார். தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் மாநில பொதுச் செயலாளர் சங்கர், புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள தொழிலாளர் சட்ட தொகுப்புகள் குறித்தும், தொழிலாளர்களுக்கு அதன் நன்மைகளை விளக்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
சங்க நிர்வாகிகள் கருணாகரன், ஜெயரட்சகன், ரவிச்சந்திரன், லோக்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். மண்டல துணை தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.

