/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டவுன், மேற்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லை விரிவாக்கம் : புத்தாண்டில் அமல்
/
டவுன், மேற்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லை விரிவாக்கம் : புத்தாண்டில் அமல்
டவுன், மேற்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லை விரிவாக்கம் : புத்தாண்டில் அமல்
டவுன், மேற்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லை விரிவாக்கம் : புத்தாண்டில் அமல்
ADDED : ஜன 01, 2026 03:52 AM
விழுப்புரம்: விழுப்புரம் டவுன் மற்றும் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லைகள் விரிவாக்கம் புத்தாண்டு தினம் முதல் அமலுக்கு வருகிறது.
விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் அதிக எண்ணிக்கையிலான கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. தமிழக அரசின் ஆணைப்படி, விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து குறிப்பிட்ட கிராமங்கள் மற்றும் வார்டுகள் விழுப்புரம் டவுன் போலீஸ் ஸ்டேஷனிற்கும், மேற்கு போலீஸ் ஸ்டேஷனிற்கும் எல்லை வரம்புகளை பிரித்து கூடுதலாக சேர்த்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அரசாணைப்படி, விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்டுள்ள அண்ணாமலை ஓட்டல் பைபாஸ் ரோடு முதல் எல்லீஸ்சத்திரம் சந்திப்பு வரை, வீரன் கோவில் சந்திப்பில் இருந்து தேரடி பிள்ளையார் கோவில் தெரு வழியாக கே.கே., ரோடு வரை, வீரவாழியம்மன் கோவில் சந்திப்பில் இருந்து எம்.ஜி., ரோடு, காமராஜர் ரோடு சந்திப்பு வரை, பிள்ளையார் கோவில் சந்திப்பில் இருந்து காட்பாடி ரயில்வே மேம்பாலம் வழியாக அண்ணாமலை ஓட்டல் சந்திப்பு வரையுள்ள அனைத்து வார்டுகள்.
கிராமப்புற பகுதிகள் விழுப்புரம் மேற்கு போலீஸ் ஸ்டேஷனிற்கு உட்பட்ட எல்லைகளாக கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. அதே போல், விழுப்புரம் நகரில் உள்ள கீழ்பெரும்பாக்கம், காகுப்பம், பொய்யப்பாக்கம், எருமனந்தாங்கல், அனிச்சம்பாளையம், மகாராஜபுரம், மாதிரிமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட அனைத்து வார்டுகள் விழுப்புரம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை வரும் 2026ம் ஆண்டு ஜன., 1ம் தேதி புத்தாண்டில் நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது. புகார் அளிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு ஏற்றவாறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சென்று புகார் அளிக்க வேண்டும் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.

