/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளையாட்டு தின கட்டுரை போட்டிவெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
/
விளையாட்டு தின கட்டுரை போட்டிவெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
விளையாட்டு தின கட்டுரை போட்டிவெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
விளையாட்டு தின கட்டுரை போட்டிவெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ADDED : செப் 10, 2025 11:51 PM

திருப்பூர்:
கடந்த, 29ம் தேதி தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. ஹாக்கி விளையாட்டின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த, மேஜர் தயான்சந்த் பிறந்தநாளை நினைவு கூறும் வகையிலான இந்நாளில், திருப்பூர் தடகள சங்கம் மற்றும் 'மை இந்தியா; மை ஸ்கூல்' அமைப்பின் சார்பில், திருப்பூர் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர், உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு பிரிவினருக்கான, கட்டுரைப் போட்டி, பல தலைப்புகளில் நடத்தப்பட்டது.
முதல் மூன்றிடம் பெற்றவர்கள்:
பள்ளி, கல்லுாரி மாணவர் பிரிவில் கனிஷ்கா (விவேகானந்தா வித்யாலயா), ஹாசினி (யுனிவர்சல் பள்ளி), ஐஸ்வர்யா அருள் (கொடுவாய் அரசுப்பள்ளி).
உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு பயிற்சியாளர் பிரிவில், முருகராஜன் (பாண்டியன் நகர் அரசுப்பள்ளி), சுந்தரமூர்த்தி (சின்மயா சர்வதேச பள்ளி), உஷா (எல்.ஆர்.ஜி., கல்லுாரி).
மூத்தோர் பிரிவு மற்றும் முன்னாள் வீரர்கள் பிரிவில், சிவானந்தம் (திருப்பூர்), சந்தியா (வஞ்சிப்பாளையம்), லதா (பல்லடம்).
விளையாட்டு ஆர்வலர் மற்றும் பொதுமக்கள் பிரிவில், பொன்னுசாமி (காங்கயம்), முத்துபாரதி (திருப்பூர்), விசாலாட்சி (திருப்பூர்).
வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. பரிசுகளை திருப்பூர் மாநகர், கொங்கு நகர சரக காவல் உதவி ஆணையர் கணேஷ், தடகள சங்க தலைவர் சண்முகசுந்தரம், துணைத் தலைவர்கள் மோகன் கார்த்திக், ஜெயபிரகாஷ், செயலாளர் முத்துக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போட்டி அமைப்பாளர் ராமகிருஷ்ணன், நன்றி கூறினார்.