ADDED : செப் 10, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சக்திவேல் கூறுகையில், ''புதிதாக தேர்வாகியுள்ள, நம் நாட்டின் துணை ஜனாதிபதியை சந்தித்து, ஆசி பெறும் வாய்ப்புகிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் ஆடை ஏற்றுமதியாளராகவும், ஏ.இ.பி.சி., உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளதை பெருமையாக நினைவு கூறுகிறேன்.
கடந்த, 40 ஆண்டு களாக, அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும், சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்கு முன்னேற்றம் ஏற்படுத்திய பணியாலும், இன்று, நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவிக்கு அவர் உயர்ந்துள்ளார். நம் நாட்டின் முன்னேற்றத்துக்கான சேவையை அவர் தொடர வேண்டுமென வாழ்த்தினோம்,'' என்றார்.