ஒயர் திருடிய 9 பெண்கள் கைது விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்தவர் முத்து, 45. திருப்பூர், கொங்கு நகர் மெயின் ரோடு, அப்பாச்சி நகரில் எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஜினியரிங் கடை நடத்தி வருகிறார். அருகே டீ சாப்பிட சென்ற போது, கடைக்குள் நுழைந்த சில பெண்கள், 45 கிலோ காப்பர் ஒயரை திருடி சென்றனர். புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார், முத்தம்மாள், 38, அனிதா, 35, மங்கம்மாள், 43, தேவி, 38, பொன்னுதாய், 50, கருத்தம்மாள், 26, சித்ரா, 27, லட்சுமி, 32 மற்றும் வள்ளி, 22 என, ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓடும் லாரியில் மது பாட்டில்கள் திருட்டு வாளையார் பகுதியில் உள்ள மது ஆலையில் இருந்து, மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு, லாரி ஒன்று, நேற்று முன்தினம், விருதுநகர் நோக்கி சென்றது. லாரி, பல்லடத்தைக் கடந்து, தாராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, லாரியின் தார்பாய் விலகி இருந்தது கண்டு டிரைவர் லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அதில், ஓடும் லாரியில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது.
மொபைல் போன் திருடியவர் கைது திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்த சரவணகுமார், 24 என்பவரின் மொபைல் போனை, அங்கு வந்த நபர் திருடி சென்றார். அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அபிஷேக், 19 என்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

