/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயிருக்கு போராடிய மயில் காப்பாற்றிய போலீஸ்
/
உயிருக்கு போராடிய மயில் காப்பாற்றிய போலீஸ்
ADDED : டிச 23, 2025 07:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், அவிநாசி ரோடு, அம்மாபாளையம் அருகே பறந்து சென்ற பெண் மயில் எதிர்பாராத விதமாக மின்கம்பியில் மோதியதில், மின்சாரம் தாக்கி கீழே விழுந்து, ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடியது.
திருமுருகன்பூண்டி ஸ்டேஷன் போலீஸ்காரர் யுவராஜ், பட்டாலியன் போலீஸ்காரர் சித்தார்த் ஆகியோர் மயிலை மீட்டு அருகில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர். மயிலை காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டார். மயிலை விரைந்து காப்பாற்றிய போலீஸ்காரரின் செயலை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

