/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில் நவராத்திரி மஹாசண்டி யாகம் துவக்கம்
/
ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில் நவராத்திரி மஹாசண்டி யாகம் துவக்கம்
ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில் நவராத்திரி மஹாசண்டி யாகம் துவக்கம்
ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில் நவராத்திரி மஹாசண்டி யாகம் துவக்கம்
ADDED : செப் 20, 2025 07:55 AM

திருப்பூர் ; ராக்கியாபாளையம், ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில், மஹா நவசண்டி யாகத்துடன், நவராத்திரி விழா பூஜைகள் நாளை துவங்குகின்றன.
திருப்பூர், அவிநாசி ரோடு, ராக்கியாபாளையம், ஐஸ்வர்யா கார்டன், ஸ்ரீபுரம், ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலில், ஸ்ரீசாரதா நவராத்திரி விழா, மஹா சண்டியாகம் நாளை துவங்கி, அக்., 1ம் தேதி வரை நடைபெற உள்ளது.
உலகநலன் வேண்டியும், தொழில்நலன் வேண்டியும், நவராத்திரி விழாவில், தினமும், நவ சண்டி யாகம் நடைபெற உள்ளது. நாளை காலை, 9:00 மணிக்கு, கணபதி ேஹாமம், நவக்கிரஹ ேஹாமம், வாஸ்து ேஹாம பூஜைகள் நடக்கின்றன; மாலையில், மங்கல இசை மற்றும் சங்கல்பம் நடைபெறும்.மாலை, 6:00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. தொடர்ந்து, 22ம் தேதி முதல், அக்., 1ம் தேதி வரை, காலை, 8:30 மணிக்கு, பூஜை துவங்கும்; தினமும், நவராத்திரி விழா பூஜையும், யாகசாலை பூஜையும், நவசண்டி பாராயணமும், சண்டி யாகமும் நடைபெற உள்ளது.
பகல், 11:45 மணிக்கு, ேஷாடாச உபசார மகாதீபாராதனையும், பகல், 12:15 மணிக்கு பிரசாதம் வழங்கப்படும். வரும் 22ம் தேதி முதல், 30ம் தேதி வரை, தினமும் மாலை, 5:30 மணிக்கு, மங்கல இசை, சங்கல்பம், மாலை, 6:00 மணிக்கு பூஜைகள், இரவு, 8:15 மணிக்கு மகாதீபாராதனையும், இரவு 8:45 மணிக்கு பிரசாத வினியோகமும் நடக்கிறது.
நவராத்திரி நாட்களில் தினசரி மாலை நடக்கும் சங்கல்பம் மற்றும் பூஜையில், கட்டளைதாரர்களாக பங்கேற்க விரும்பும் பக்தர்கள் கோவில் அலுவலகத்தை, 97510 55111 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.