/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உன்னதமே உயர்நிலை! 'சைனோகிராப்' கருத்தரங்கில் இளம் தொழில் முனைவோருக்கு அறிவுரை
/
உன்னதமே உயர்நிலை! 'சைனோகிராப்' கருத்தரங்கில் இளம் தொழில் முனைவோருக்கு அறிவுரை
உன்னதமே உயர்நிலை! 'சைனோகிராப்' கருத்தரங்கில் இளம் தொழில் முனைவோருக்கு அறிவுரை
உன்னதமே உயர்நிலை! 'சைனோகிராப்' கருத்தரங்கில் இளம் தொழில் முனைவோருக்கு அறிவுரை
ADDED : செப் 20, 2025 07:57 AM

திருப்பூர்: ''இளம் தொழில்முனைவோர், வாய்ப்பு கிடைக்கும் போது, உன்னதமாக பயன்படுத்தி, உயர்ந்த நிலையை அடைய வேண்டும்,'' என, சி.ஐ.ஐ., மாநில துணை தலைவர் தேவராஜன் அறிவுறுத்தினார். இந்திய தொழிற் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) மற்றும் 'யங் இந்தியன்ஸ்' அமைப்புகள் சார்பில், தொழில்முனைவோர், தொழில்துறையினர், வர்த்தகர்கள், மாணவ, மாணவியருக்கான, தொழில்நெறி கருத்தரங்கு, திருப்பூர், திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் நேற்று நடந்தது.
சி.ஐ.ஐ., மாவட்ட தலைவர் மனோஜ் வரவேற்றார். 'யங் இந்தியன்ஸ்' திருப்பூர் மாவட்ட தலைவர் மோகன்குமார், 'சைனோகிராப் -3.0' தொழில்நெறி கருத்தரங்கு நடத்துவதன் நோக்கத்தை விளக்கி பேசினார். கருத்தரங்கின் ஒரு பகுதியாக, சிறந்த சேவையாளருக்கான விருதுகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம், எழுத்தாளர் சிவதாசன், 'லக்ஸ்' நிறுவன உரிமையாளர் ராகுல் டோடி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. சி.ஐ.ஐ., துணை தலைவர் சுனில்குமார், 'யங் இந்தியன்ஸ்' துணை தலைவர் விமல்ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
காத்திருக்கும் வாய்ப்பு
சி.ஐ.ஐ., மாநில துணை தலைவர் தேவராஜன் பேசியதாவது:
மரத்தில் இருந்து வரும் பலனை அனுபவிக்கிறோம்; மண்ணை கவனிப்பதில்லை என்ற குறைபாடு இருக்கிறது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில், 'சைனோகிராப்' கருத்தரங்கு நடத்தப்படுகிறது. உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. இது, 3வது கருத்தரங்கு. 10 வது கருத்தரங்கு நடக்கும் போது, திருப்பூர் நிறுவனங்கள், உலக அளவில் பிரசித்தி பெற்ற, 500 'பிராண்ட்'களை உருவாக்கி இருக்க வேண்டும்.
திருப்பூர் இன்னும் எத்தனை நாட்களுக்கு, யாருக்கோ வேலை செய்ய வேண்டும். சொந்த 'பிராண்ட்' உருவாக்க வேண்டும், அரசுக்கு, மாதம், 2 லட்சம் கோடி ரூபாய், ஜி.எஸ்.டி. வருவாய் கிடைக்கிறது. அரசும் தேவையான உதவியை செய்ய தயாராக இருக்கிறது. அடுத்து என்ன செய்யலாம் என்று திட்டமிட வேண்டும். இந்தியா எத்தகைய சாதனையையும் அடைய முடியும் என்ற உலக நாடுகள் உணர்ந்துள்ளன. நம்மிடையே திறமைகள் குவிந்து கிடக்கின்றன. திருப்பூரில், ஆய்வக வசதியுடன் கூடிய நிறுவனஜங்கள் இருக்காது. தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
திருப்பூர் என்றாலே பின்னலாடை மற்றும் ஏற்றுமதி மட்டும்தான் என்று இருக்கக் கூடாது. 'டிசைன் ஸ்டுடியோ' போன்ற வசதிகள் திருப்பூரிலேயே உருவாக்கப்பட வேண்டும். இளம் தொழில்முனைவோர், ஆயிரம் பேரில் ஒருவராக இருக்க கூடாது. நம்முடைய 'பிராண்ட்' நாடு முழுவதும் பிரசித்தி பெற்றதாக மாற வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் குறுவட்டத்துக்குள் இருக்காதீர்கள்; சாதனை படைக்க ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. வாய்ப்பு கிடைக்கும் போது, அதனை உன்னதமாக பயன்படுத்தி, உயர்ந்த நிலையை அடைய வேண்டும். அதேநேரத்தில், ஒழுக்கமானர்களாக, நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்; அப்போதுதான், நிலையான வெற்றியை அடைய முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, தொழில்துறையினர், வழிகாட்டி ஆலோசகர்கள் என, பல்வேறு தலைப்புகளில் பேசினர். ஒவ்வொரு அமர்வின் போதும், தொழில்துறையினர் மற்றும் மாணவ, மாணவியர், தங்களது சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றனர்.