/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துலுக்கமுத்துார் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு?
/
துலுக்கமுத்துார் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு?
ADDED : செப் 20, 2025 07:54 AM
அவிநாசி ; 'அவிநாசி, துலுக்கமுத்துார் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை களையவும், தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் பால் உற்பத்தியாளர் அணி சார்பில், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:துலுக்கமுத்துாரில் செயல்பட்டு வரும், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், 100க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு பணிபுரியும் ஊழியர்கள், பாலுடன் தண்ணீர் கலந்து, தங்களது உறவினர்கள் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி, மோசடி செய்து வருகின்றனர். பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும், பலனில்லை. உரிய கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.