/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீபாவளிக்கு முன் நல்ல செய்தி கிடைக்கும்! ஏற்றுமதியாளர் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் நம்பிக்கை
/
தீபாவளிக்கு முன் நல்ல செய்தி கிடைக்கும்! ஏற்றுமதியாளர் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் நம்பிக்கை
தீபாவளிக்கு முன் நல்ல செய்தி கிடைக்கும்! ஏற்றுமதியாளர் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் நம்பிக்கை
தீபாவளிக்கு முன் நல்ல செய்தி கிடைக்கும்! ஏற்றுமதியாளர் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் நம்பிக்கை
ADDED : செப் 23, 2025 06:10 AM

திருப்பூர்; திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க, 35வது ஆண்டு பொதுக்குழு, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, விருதுகள் வழங்குதல் விழா, பாப்பீஸ் விஸ்டா ஓட்டலில் நடைபெற்றது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் குமார் துரைசாமி வரவேற்றார். பொது செயலாளர் திருக்குமரன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் கோபாலகிருஷ்ணன் வருடாந்திர வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார்.
சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில், ''கடந்த ஜூலையில், யு.கே.,வுடன் வரியில்லா ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேபோல ஐரோப்பிய ஒன்றியத்துடனும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நம்பப்படுகிறது. அமெரிக்காவின் வரி விதிப்பு பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. பல்வேறு வகையில் பல சவால்களை சந்தித்து வரும் திருப்பூர் கிளஸ்டர் ஒவ்வொரு முறையும் வலுவாக மீண்டெழுந்து வளர்ந்து வருகிறது,'' என்றார்.
புதிய நிர்வாக குழுவில் 2025--28ம் ஆண்டுக்கான நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர். தொடர்ந்து, ஆண்டுக்கு ஆண்டு ஏற்றுமதி வளர்ச்சி, சுற்றுச்சூழல், சமூக நிர்வாகம், பெண் தொழில் முனைவோர், இளம் தொழில் அதிபர் ஆகிய பிரிவுகளில் ஏற்றுமதியாளர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என, 13 விருதுகள் வழங்கப்பட்டது.
சங்கத்தின் கவுரவத் தலைவர் சக்திவேல் பேசியதாவது:
வரி ரத்தாகும்! அமெரிக்கா வரி விதிப்பினால் உலக ஜவுளி சந்தை சிறிய சரிவை சந்தித்திருக்கிறது. இது தற்காலிகமானது. இந்தியா, அமெரிக்க அரசுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை மீண்டும் துவங்கியுள்ளது. நிச்சயமாக தீபாவளிக்கு முன் நமக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என தீர்க்கமாக நம்புகிறேன். கூடுதலாக விதிக்கப்பட்ட, 25 சதவீத வரி நிச்சயமாக ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.
அடுத்த, 20 ஆண்டுகள் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு பொற்காலம் என்று ஆணித்தரமாக நம்பலாம். அனைத்து உறுப்பினர்களும் உற்பத்தியும் உற்பத்தி திறனையும் மேம்படுத்த வேண்டும். துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.