ADDED : டிச 15, 2025 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ. சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக பயிலரங்கம் மற்றும் மாநாடு கணக்கம்பாளையம் கிருஷ்ணா மஹாலில் நடந்தது.
இதில் பங்கேற்ற ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் பழனிச்சாமி பேசுகையில், ''பா.ஜ.வினர் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
வரும் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும்'' என்றார். மாநில செயற்குழு உறுப்பினர் விஜயராகவன், மாநில சிறுபான்மை அணி தலைவர் ஜான்சன், மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

