ADDED : டிச 15, 2025 05:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி அடுத்த ஆட்டையாம்பாளையம் அருகே சென்னிமலைக்கவுண்டன்புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில் திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம்; கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடந்தது.
முகாமில் 138 பேர் பங்கேற்றனர். கண் சிகிச்சை தொடர்பாக மருத்துவ ஆலோசனை, விளக்கம் அளிக்கப்பட்டது. 48 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. 13 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

