நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், இடுவம்பாளையம், மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 55. இவர் கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகே தனியார் வங்கியில் துப்பாக்கி ஏந்திய காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
செல்வராஜ் வைத்திருக்கும் துப்பாக்கி உரிமம் போலியானது என, வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக அவரது வீட்டுக்கு சென்று விசாரித்தனர். தொடர்ந்து, துப்பாக்கி உரிமம் போலியானது என தெரிந்தது. அவரை கைது செய்த வீரபாண்டி போலீசார், துப்பாக்கி, நான்கு தோட்டாக்கள் மற்றும் போலி துப்பாக்கி உரிமம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், இவருக்கு போலி உரிமம் தயார் செய்து கொடுத்தது யார், இதுபோன்று வங்கியில் உள்ள காவலாளிகள் முறையாக உரிமம் பெற்றுள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.