/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பல மாதங்களாக வீணாகும் குடிநீர் திருவேங்கிடபுரம் மக்கள் புகார் மனு
/
பல மாதங்களாக வீணாகும் குடிநீர் திருவேங்கிடபுரம் மக்கள் புகார் மனு
பல மாதங்களாக வீணாகும் குடிநீர் திருவேங்கிடபுரம் மக்கள் புகார் மனு
பல மாதங்களாக வீணாகும் குடிநீர் திருவேங்கிடபுரம் மக்கள் புகார் மனு
ADDED : செப் 09, 2025 10:39 PM
பொன்னேரி:குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வருவது குறித்து, அரசு முகாமில் புகார் அளிக்கப்பட்டது.
பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள திருவேங்கிடபுரம் பொன்னியம்மன் கோவில் எதிரே, குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக சீரமைக்கப்படாததால், தண்ணீர் வீணாகி வருகிறது.
இதனால், அப்பகுதியில் சாலையும் சேதமடைந்து வருகிறது. குடிநீர் குழாய் உடைப்பு குறித்து, தடப்பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.
நேற்று நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், இதுதொடர்பாக மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:
குழாய் உடைப்பு சரிசெய்யப்படாத நிலையில், குடிநீர் வீணாவதுடன், சாலையும் சேதமடைந்து, வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், உடைப்புகள் வழியாக வெளிக்கழிவுகள் குடிநீரில் கலந்து, பொதுமக்களுக்கு சுகாதார பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி, குழாய் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.