/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேளாண் உள்கட்டமைப்பு ஏற்படுத்த தொழில் முனைவோருக்கு கடன்
/
வேளாண் உள்கட்டமைப்பு ஏற்படுத்த தொழில் முனைவோருக்கு கடன்
வேளாண் உள்கட்டமைப்பு ஏற்படுத்த தொழில் முனைவோருக்கு கடன்
வேளாண் உள்கட்டமைப்பு ஏற்படுத்த தொழில் முனைவோருக்கு கடன்
ADDED : செப் 09, 2025 10:40 PM
திருவள்ளூர்:வேளாண் உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தும் தொடக்க வங்கி, தொழில் முனைவோருக்கு கடன் வழங்கப்பட உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை வீணாகாமல், கிராம அளவில் ஒன்று சேர்ந்து மதிப்புக்கூட்டி, விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்க, மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்குகிறது. நடப்பு 2025 - -26ம் ஆண்டிற்கு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு 73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்டத்தில் வேளாண் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த முன்வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் வேளாண் தொழில் முனைவோருக்கு கடன் வசதி செய்ய உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மின் சந்தையுடன் கூடிய வினியோக தொடர் சேவை, சேமிப்பு கிடங்கு, சிப்பம் கட்டும் கூடம், 'ட்ரோன்' மற்றும் நெல், கரும்பு அறுவடை கருவிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்த கடன் வழங்கப்படும்.
விபரங்களுக்கு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் வேளாண் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், https://agriinfra.dac.gov.in/ என்ற இணையதளத்தில், வங்கி கிளைக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.