ADDED : செப் 09, 2025 10:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த புட்லுார் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மணி, 68; விவசாய கூலி தொழிலாளி.
இவர், நேற்று காலை 7:30 மணியளவில், புட்லுார் ரயில் நிலையம் அருகே கடவுப்பாதையை க டக்க முயன்றார்.
அப்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற புறநகர் மின்சார ரயில் மோதியதில் உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார், சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.