ADDED : செப் 09, 2025 10:51 PM
திருவாலங்காடு:ஆந்திராவில் இருந்து திருவாலங்காடு வழியே குட்கா பொருட்கள் கடத்துவதாக, திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை திருவாலங்காடு ரவுண்டானா பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஆந்திரா மற்றும் தமிழக பதிவெண் கொண்ட இரண்டு காரை போலீசார் நிறுத்தினர். போலீசாரை கண்டதும் காரில் இருந்தவர்கள் தப்பியோடினர். காரி ல் குட்கா பொருட்கள் இருந்தது. போலீசார் அவர்களை துரத்தி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லலித், 27, ரமேஷ் குமார், 33, சம்பூர், 26, ரத்தினராம், 34, பிரவின், 20, என்பதும், திருவாலங்காடு பகுதியில் குட்கா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது.
இந்த குட்கா பொருட்களின் மதிப்பு, 15 லட்சம் ரூபாய். திருவாலங்காடு போலீசார், ஐந்து பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.