/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
டில்லியில் போராட்டம் நடத்த ரயிலில் புறப்பட்ட விவசாயிகள்
/
டில்லியில் போராட்டம் நடத்த ரயிலில் புறப்பட்ட விவசாயிகள்
டில்லியில் போராட்டம் நடத்த ரயிலில் புறப்பட்ட விவசாயிகள்
டில்லியில் போராட்டம் நடத்த ரயிலில் புறப்பட்ட விவசாயிகள்
ADDED : ஆக 24, 2025 05:54 AM
தஞ்சாவூர்: டெல்டா மாவட்ட விவசாயிகள், ஆக., 26 டில்லியில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக, ரயிலில் புறப்பட்டனர்.
டில்லியில், ஆக., 25 இந்திய அளவிலான விவசாயிகள் கூட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து, ஆக., 26, தமிழ்நாடு அனைத்து விவசா யிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், டில்லியில் பார்லிமென்ட் முன், விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளனர். அதில் பங்கேற்பதற்காக, டெல்டா மாவட்ட விவசாயிகள், 30 பேர், நேற்று, தஞ்சாவூரில் இருந்து ரயிலில் புறப்பட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாண்டியன் கூறியதாவது:
தமிழக, கர்நாடக விவசாயிகள் நலனுக்கு எதிராக, மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை சட்ட விரோதம், என மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பை வழங்க வேண்டும். 152 அடி கொள்ளளவை உயர்த்திட, பேபி அணையை பலப்படுத்த, சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிறைவேற்ற அனுமதி மறுக்கும் கேரளா அரசின் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மரபணு மாற்று தொழில் நுட்பத்தை, வேளாண்மையில் புகுத்தும், மத்திய அரசின் கொள்கை முடிவை கைவிட வேண்டும்.
மரபணு திருத்தப்பட்ட விதைகளையும், மரபணு மாற்று தொழில் நுட்பத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, முற்றுகை போராட்டத்தை நடத்த உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.