/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
இடுப்பில் தேசியக்கொடி ஆர்வலர் கைது
/
இடுப்பில் தேசியக்கொடி ஆர்வலர் கைது
ADDED : ஆக 22, 2025 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நாச்சியார் கோவிலை சேர்ந்தவர் கோவிந்த வல்லபபந்த், 5 7; சமூக ஆர்வலர்.
இவர், நாச்சியார்கோவிலில் உள்ள, 8 குளங்களை துா ர்வார கோரி, நேற்று முன்தினம், கும்பகோணம் சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில், தேசியக்கொடியை இடுப்பில் கட்டி, சப் - கலெக்டர் ஹிருத்யா முன், அ ரை நிர்வாண போராட்டம் நடத்தினார்.
கும்பகோணம் கிழக்கு போலீசார், தேசியக்கொடி அவமதிப்பு உள்ளிட்ட மூன்று பிரிவுகளில், கோவிந்த வல்லபபந்தை கைது செய்தனர்.