/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கல்லுாரி மாணவர், சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
/
கல்லுாரி மாணவர், சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
கல்லுாரி மாணவர், சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
கல்லுாரி மாணவர், சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
ADDED : ஆக 25, 2025 01:50 AM
பூதலுார்: வெவ்வேறு இடங்களில், தண்ணீரில் மூழ்கி, மாணவர்கள் இருவர் இறந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், சோழகம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் ஜனா, 7. இவர் நேற்று, மாரனேரி, கல்லணை கால்வாய் ஆற்றில் குளித்தபோது, நீரில் அடித்து செல்லப்பட்டார்.
கீழ்குமுளியில் குளித்துக்கொண்டு இருந்தவர்கள், சிறுவனை மீட்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பூதலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சி மாவட்டம், செம்பரை பகுதியை சேர்ந்த ஆரியன் மகன் சரண், 20. தனியார் கல்லுாரி மாணவர். நேற்று மதியம், நண்பர்களுடன், தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்தார். சக நண்பர் ஒருவர் நீரில் மூழ்கியதால், அவரை காப்பாற்ற முயன்றதில், இவர் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார்.
அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், அவர் இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார். திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.